தூத்துக்குடியில் கடும் பனிமூட்டம்; தரையிறங்க முடியாமல் சென்னை விமானம் திருவனந்தபுரம் சென்றது: 45 நிமிடங்கள் வானில் வட்டமிட்டதால் பீதி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடும் பனி மூட்டம் எதிரொலியாக சென்னையிலிருந்து வந்த விமானம் தரையிறங்க முடியாததால் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றது. இன்று காலை 6.45 மணி முதல் 7.30 மணி வரை விமான நிலையம் மேலே வட்டமிட்டதால் பயணிகள் பீதியடைந்தனர்.

தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினமும் 5 முறையும், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு 5 முறையும், தூத்துக்குடியிலிருந்து பெங்களூருவுக்கு 2 முறையும், பெங்களூருவிலிருந்து தூத்துக்குடி 2 முறையும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து இன்று அதிகாலை புறப்பட்ட விமானம், காலை 6.45 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் அருகே வந்தது.

ஆனால் தூத்துக்குடியில் இன்று கடும் பனிமூட்டம் நிலவியதால் விமானம், நிலையத்திற்குள் தரையிறங்க சிக்னல் கிடைக்கவில்லை. இதையடுத்து காலை 7.30 மணி வரை வானில் அந்த விமானம் வட்டமிட்ட படியே சிக்னலுக்காக காத்து நின்றது. ஆனால் பனி மூட்டம் விலகாததால் சிக்னல் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த விமானம் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் இருந்த மொத்தம் 39 பயணிகளும் பீதியடைந்தனர்.

Related Stories: