டெல்டா மாவட்டங்கள், கடலூர் மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்

சென்னை: டெல்டா மாவட்டங்கள், கடலூர் மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தம் படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் நேற்று அது மீண்டும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றிரவு 11.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது.

இந்நிலையில் இது குறித்து வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; சென்னையில் இருந்து தென் கிழக்கில் 550 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. காரைக்காலுக்கு கிழக்கு - தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. காலையில் 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயல் தற்போது 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. மாண்டஸ் புயல் காரணமாக காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்க கூடும்.

மாண்டஸ் புயல் தற்போதைய நிலவரப்படி புயலாகவே கரையை கடக்க கூடும். தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை இரவு புயல் கரையை கடக்கும். நாளை இரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும் போது 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இன்று தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.  தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும். டெல்டா மாவட்டங்கள், கடலூர் மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்.

மாண்டஸ் புயல் காரணமாக நாளை தமிழ்நாடு, ஆந்திராவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும். சென்னையில் நாளை, நாளை மறுநாள் மிக கனமழை பெய்யம் டிசம்பர் 10ம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் டிச. 10ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: