நீதிமன்ற நடவடிக்கைகளை பார்க்க உச்சநீதிமன்ற செயலி அறிமுகம்

புதுடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், ‘‘உச்சநீதிமன்ற மொபைல் ஆப் 2.0 என்ற செயலி, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு தயாராக உள்ளது. இந்த மொபைல் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செயலியில் இந்த முறை கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற மொபைல் ஆப் 2.0 செயலி இன்னும் ஒரு வாரத்தில் ஆப்பிள், ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கும். வக்கீல்கள் மற்றும் ஒன்றிய அரசின் அமைச்சகங்களின் சட்ட அதிகாரிகள் நீதிமன்ற நடவடிக்கைகளை இந்த செயலி வழியாக தெரிந்து கொள்ளலாம். வழக்குகளின் நிலை, உத்தரவு, தீர்ப்புகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை ஆகியவற்றை இந்த செயலி மூலம் சரிபார்த்து கொள்ளலாம்’’ என்றார்.

Related Stories: