பாஜவின் பெரும்பான்மையால் நாடாளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது: மம்தா குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கும் முன்பாக, தனது கட்சி எம்பிக்களுடன் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘மாநில உரிமைகளில் தலையிடக்கூடிய 16 மசோதாக்களை குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இப்படிப்பட்ட மசோதாக்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தாலும் தனது பெரும்பான்மை பலத்தால் ஒன்றிய அரசு வாக்கெடுப்பு எதுவும் நடத்தாமல் மசோதாக்களை வலுக்கட்டாயமாக நிறைவேற்றுகிறது.

நிலைக்குழு, தேர்வுக்குழு அறிக்கைகள் எதையும் அவர்கள் ஏற்க மாட்டார்கள்.இப்படியே போனால் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலைத்து நிற்குமா, இதுவரை பாதுகாக்கப்பட்டு வந்த அதன் மதிப்பும், மரியாதையும் என்னவாகும் என நாங்கள் அஞ்சுகிறோம். நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: