ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 40 காட்டு யானைகள் முகாம்:கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தல்

ஓசூர்: ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் வண்ணார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தமிழகத்தை நோக்கி வந்தன. வருடாவருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இடம்பெயர்வதை யானைகள் வழக்கமாக கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் கடந்த மாதம் 100-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் ஜவலகிரிவழியாக இடம் பெயர்ந்தது. ஜவலகிரியாக வந்த யானை கூட்டங்கள் தேன்கனிக்கோட்டை, ஓசூர் சுற்று பகுதிகளில் சுற்றி வருகின்றன.

குறிப்பாக இந்த காட்டு யானைகள் பகல் நேரங்களில் வனப்பகுதிகளில் தஞ்சமடைந்து, இரவு நேரங்களில் வெளியேவந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது. இதே போல் ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் அந்த பகுதியில் இருந்த விளைபயிர்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து இன்று காலை ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்த காட்டுயானைகள் அருகில் இருந்த சானமாவு வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தது.

யானைகள் நடமாட்டத்தை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் காட்டு யானைகள் வனப்பகுதியை சுற்றிய திரிந்துகொண்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாவும் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: