வீட்டின் முன்னாள் ஊழியர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு: நடிகை பார்வதி நாயர் அளித்த புகாரில் போலீஸ் நடவடிக்கை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் கேரளாவை சேர்ந்த பிரபல சினிமா நடிகை பார்வதி நாயர் வசித்து வருகிறார். இந்நிலையில், நடிகை பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் காவல் நியைத்தில் நேற்று முன்தினம் தனது வீட்டில் வேலை செய்த சுபாஷ் சந்திர போஸ் மீது புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், தன் வீட்டில் பணியாற்றிய சுபாஷ் சந்திரபோஸ், என் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், யூடியூப் சேனல்களில், தான் வீட்டில் ஆண் நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்தாகவும், அதை அவர் பார்த்ததால் அவர் மீது நான் திருட்டு பட்டம் கட்டியதாக பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.

இதனால் நான் மிகவும் மனமுடைந்த நிலையில் இருக்கிறேன். நடக்காத சம்பவத்தை நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை கூறி வரும் சுபாஷ் சந்திர போஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். அந்த புகாரின் படி நுங்கம்பாக்கம் போலீசார், நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் சுபாஷ் சந்திரபோஸ் மீது இந்திய தண்டனைச் சட்டம் 509(பெண்மையை களங்கப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல்), 506(1)(மிரட்டல்), 67 (ஏ) தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: