ஓய்வூதியம் ரூ.1000த்தில் இருந்து ரூ.1,500-ஆக உயர்வு மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர்கள் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி கடந்த 3ம் தேதி நடைபெற்ற விழாவில், “வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கு தற்போது பெற்றுவரும் ஓய்வூதியம் 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும்” என்று அறிவித்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமை செயலகத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில தலைவர் பா.ஜான்சிராணி, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தங்கம்,டிசம்பர்-3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.எம்.என்.தீபக், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் சிம்மச்சந்திரன், தேசிய பார்வையற்றோர் இணையத்தின் திட்ட இயக்குநர் மனோகரன், தமிழ்நாடு உதவிக்கரம் - மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் வரதகுட்டி, இந்திய மாற்றுத் திறனாளிகள் நல சங்கத்தின் தலைவர் சகாதேவன், நேத்ரோதயா நிறுவனர் கோவிந்தகிருஷ்ணன், காது கேளாத மற்றும் பேச இயலாத மாற்றுத் திறனுடையோர் பாதுகாப்பு பவுண்டேசன் தலைவர் அப்துல் லத்தீப், சிவகங்கை தவழும் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் புஷ்பராஜ், தமிழ்நாடு உயரம் குறைந்தோர் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் ராகுல், தென்காசி அமர் சேவா சங்கத்தின் உறுப்பினர் அழகப்பன், தமிழ்நாடு பார்வையற்றோர் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பூங்காவனம், காதுகேளாதோருக்கான கூட்டமைப்பின் ரமேஷ் பாபு மற்றும் மோகன், அனைத்து குறைபாடுகள் உள்ள பெண்களின் உரிமைகளுக்கான சங்கத்தின் அருணாதேவி மற்றும் சங்க பிரதிநிதிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Related Stories: