மதுரவாயல் துறைமுகம் உயர்மட்ட சாலையால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா மனு

சென்னை: மதுரவாயல் துறைமுகம் உயர்மட்ட சாலையால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஏ.எம்.விக்கிரமராஜா மனு அளித்தார். சென்னை, மதுரவாயல் துறைமுகம் உயர்மட்ட சாலையினால் பாதிக்கப்பட்ட சிந்தாதிரிப்பேட்டை வாகன உதிரிபாக முன்தொகை  செலுத்திய வியாபாரிகள் அனைவருக்கும் அரசினால் அறிவிக்கப்பட்ட ஆட்டோ நகர் பேஸ்-2, செங்கல்பட்டு, ஆப்பூரில் ஏற்கனவே மேம்படுத்தப்பட்ட வணிக மனைகளை உடனடியாக ஒதுக்கீடு செய்யவேண்டும்.

என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா இன்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் மனு அளித்தார். அப்போது பேரமைப்பு தலைமை செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, என்.உசேன்சேட், ஹாஜி எஸ்.யு.சாகுல் ஹமீது மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். இவர்கள் அளித்த மனுவை ஏற்றுக்கொண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் உடனடியாக கடைகள் ஒதுக்கீட்டுக்கான ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்தார்.

Related Stories: