கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கட்டு வாழை இலை ரூ.1,700: கார்த்திகை தீபத்தையொட்டி எகிறியது

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, மதுரை, வேலூர், தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி மற்றும் ஆந்திர மாநிலம் வத்தலகுண்டு, கடப்பா ஆகிய பகுதிகளில் இருந்து வாழை இலை கொண்டுவரப்படுகிறது. கடந்த ஆயூதபூஜை அன்று ஒரு கட்டு வாழை இலை 1,800க்கும் ஒரு தலை வாழை இலை 5 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று கார்த்திகை தீபம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பே ஒருகட்டு வாழை இலை 1700க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தலைவாழை இலை 8 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் ஒரு கட்டு வாழை இலை 2000க்கும் ஒரு தலைவாழை இலை 10 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வாழை இலை வியாபாரி சந்திரசேகர் கூறும்போது, ‘’வரத்து குறைவு மற்றும் கார்த்திகை தீபம் என்பதால்  கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கட்டு வாழை இலை 500ல் இருந்து 1000க்கும் 1000 கட்டு வாழை இலை 1700க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு வாழை இலை 2 ரூபாயில் இருந்து 8 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மூன்று நாட்கள் பிறகு படிப்படியாக விலை குறையும்’ என்றார்.

இல்லத்தரசிகள் கூறும்போது, ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கட்டு வாழை இலை 400க்கு ஒரு வாழை இலை 2 ரூபாய்க்கும் விற்பனையானது. இன்று கார்த்திகை தீபம் என்பதால் இரண்டு நாட்களாக ஒரு கட்டு வாழை இலை 1700க்கும் ஒரு தலைவாழை இலை 8 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மார்க்கெட்டுக்கு வந்து வாங்குவதைவிட வீட்டின் அருகே உள்ள கடைகளில் வாழை இலை வாங்க வந்தால் அங்கு ஒரு கட்டு வாழை இலை 2000க்கும் ஒரு வாழை இலை 10 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றனர்’ என்றனர்.

Related Stories: