குமரியில் முறையாக வடிகால் அமைக்க கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது..!!

குமரி: குமரியில் முறையாக வடிகால் அமைக்க கோரி பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தமிழக - கேரள எல்லை பகுதியான செரியகொள்ளா கிராமத்தில் முறையான வடிகால் இல்லாததால் சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாஜகவினருக்கும், கேரள போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். சாலையின் வலதுபுறம் தமிழக பகுதியாகவும், இடதுபுறம் கேரள பகுதியாக உள்ள நிலையில், உடனடியாக வடிகால் அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: