உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெய்வேலியில் ரத்ததான முகாம்: அமைச்சர் சி.வெ.கணேசன் பங்கேற்பு

நெய்வேலி: நெய்வேலி நகர பகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாள் விழா நகர திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நெய்வேலி எம்எல்ஏ சபா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பக்கிரிசாமி முன்னிலை வகித்தார். ரத்ததான முகாமில் ரத்ததானம் செய்தவர்களுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் சான்றிதழ்கள் வழங்கி  பாராட்டினார். இதனைத் தொடர்ந்து நகர பகுதி முழுவதும் கட்சி கொடியேற்றி,  இனிப்புகள் வழங்கி பொதுமக்களுக்கு அசைவ உணவுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் தண்டபாணி, திமுக தலைமை  செயற்குழு உறுப்பினர் ராசவண்ணியன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், என்எல்சி தொமுச தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் பாரி. பொருளாளர் ஐயப்பன், அலுவலக செயலாளர் ஜெரால்டு, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற துணைத்  தலைவர் சதாம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: