ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட அரசு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யும்: உயர் நீதிமன்றம் நம்பிக்கை

சென்னை: சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகாவேரிப்பாக்கம் கிராமத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட அரசு முடிவு செய்தது. ஆனால், இதுவரை அதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை.

எனவே, நிதி ஒதுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதற்கான திருத்திய திட்டம் மற்றும் மதிப்பீடு நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக அரசு பிளீடர் முத்துக்குமார் தெரிவித்தார். இதை பதிவு செய்து நீதிபதிகள், விரைவில் அரசு நிதி ஒதுக்கும் என்று நம்புகிறோம் என்றனர்.

Related Stories: