ஏற்கனவே ராஜினாமா செய்த நிலையில் ராஜ்யசபா எதிர்கட்சி தலைவராக கார்கே நீடிப்பு: காங்கிரஸ் பொதுச் செயலாளர் தகவல்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராஜ்ய சபா எதிர்கட்சி தலைவராக தொடர்ந்து செயல்படுவார் என்று பொதுச் செயலாளர் ெஜய்ராம் ரமேஷ் கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. வரும் 7ம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ளதால், அது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களிடம் கூறுகையில், ‘மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே (காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படும் முன், கார்கே தனது மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்) தொடர்வது குறித்து  ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கவில்லை.

நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தியும், எங்கள் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கேவும் உள்ளனர். இந்த  விவகாரத்தை ஆலோசனைக் குழு கூட்டத்தில் விவாதிக்க முடியாது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் கட்சியின் தலைவராக மட்டுமின்றி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் தொடர்ந்து செயல்படுவார். அவர் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படுவார்’ என்றார்.

Related Stories: