துபாயில் தமிழ் அமைப்பின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தேசிய தின விழா: விளையாட்டுப் போட்டிகள், பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நடந்தன

துபாய்: துபாயில் தமிழ் அமைப்பின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தேசிய தின விழா நடைபெற்றது. 3 டிசம்பர் நேற்று டிசம்பர் 2 அமீரக தேசிய தின விழா துபாய் ஈமான் கலாச்சார மையம் சார்பில் மிகச் சிறப்பாக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. 1600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். ஏராளமான விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முதல் பரிசாக ஒரு பவுன் தங்கம் இரண்டாம் பரிசாக இருவருக்கு 1/4 பவுன் இரண்டு தங்க நாணயங்களும் ஐந்து நபர்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயம் 20 நபர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா முப்பது கிராம் வெள்ளி நாணயமும் மற்றும் நூற்றுக்கும் அதிகமான பரிசுகளும் வழங்கப்பட்டது. சமூகப் பணியில் சிறப்பாக பணிபுரிந்தோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் தலைவர் பி எஸ் எம் ஹபிபுல்லாகான் தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக தமிழகத்தில் இருந்து வக்பு போர்டு சேர்மன் அப்துர் ரஹ்மான் மற்றும் இந்திய துணை தூதர்  ராம்குமார் பங்கேற்றார். இமான் துணைத் தலைவர் கமால்  பொருளாளர் பிலாக் துளிப் எஹியா, ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்.ஜே.சாரா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் அமீரகத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் நிறுவனங்கள் சமூக நல ஆர்வலர்கள் என ஏராளமானோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்

சோனா ராம் ஆடிட்டிங் நிறுவனம்,திருச்சி கோல்ட்,பி எஸ் எம் ஹோல்டிங்ஸ்,பிளாக் துளிப் நிறுவனம், அலைட் மோட்டார்ஸ், லேண்ட் மார்க் குழுமம், ஒன்டர்புல் நிறுவனம், ரேடியன் ஸ்டார், அன்வர் டைப்பிங், பிரிமியர் லாஜிஸ்டிக்ஸ், சூப்பர் சோனிக், அந்தோலியா ,மொலினா, சிங்கப்பூர் ஹவுஸ் ,பவர் குழுமம், நஜ்மா அல் பரிதா, டாப் ஸ்டார் நிறுவனங்களின் பரிசுகளுக்கான ஆதரவு அளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் தலைமையில் நிர்வாகிகள் பைசூர் ரகுமான் ,யாகூப், சித்திக், நிஜாம் ,சமீர், சர்புதீன், ஜமால் சாகுல் ஹமீது ,ராசிக், ஜலால்,சேக்,அஸ்கர் உள்ளிட்ட ஈமான் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: