அடுத்த ஆண்டு மார்ச்சில் பாட்னாவில் ஜி 20 மாநாடு

பாட்னா: பீகாரில் மார்ச் மாதம் நடைபெற உள்ள ஜி20 கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு தொடங்கி உள்ளது. ஜி20 தலைமை பொறுப்பை கடந்த ஒன்றாம் தேதி இந்தியா ஏற்றது. தொடர்ந்து ஓராண்டுக்கு இந்த தலைமை பதவியை இந்தியா வகிக்கும். இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு முதல் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகின்றது. இதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் 50 நகரங்களில் பல்வேறு துறைகளுடன் இணைந்து 200 ஜி20 கூட்டங்களை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக பீகாரின் பாட்னாவில் அடுத்த ஆண்டு மார்ச் 6 மற்றும் 7ம் தேதியும் ஜி20 கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநில அரசு தற்போது தொடங்கி உள்ளது. கூட்டத்தில் வரவேற்பு நிகழ்ச்சி, பிரபல நாட்டுப்புற இசை,நடனம், அழிந்து வரும் கலைகள் உள்ளிட்டவை குறித்த நிகழ்ச்சிகள் இடம்பெறும். கூட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் குறித்த பட்டியல் இறுதி செய்யப்பட்டு விரைவில் இந்திய கலாசார கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாநில கலை மற்றும் கலாச்சார துறை செயலாளர் பந்தனா பிரியாஷி தெரிவித்துள்ளார்.

Related Stories: