க.சுந்தர் எம்எல்ஏ மகன் திருமண விழா: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு; காஞ்சிபுரம் திமுகவினர் ஏற்பாடு

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் மகன் திருமண  விழாவுக்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  மாமல்லபுரம் பூஞ்சேரி கூட்ரோடு பகுதியில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் எம்எல்ஏவுமான  க.சுந்தரின் மகன் எஸ்.வெற்றிச்செல்வனுக்கும், காஞ்சிபுரம் ஜெயராமன்-சாந்தி ஆகியோரின் மகள் ஜெ.நித்தியவதிக்கும் நாளை 4ம் தேதி காலை 9 மணிக்கு மாமல்லபுரம் கான்புலியுன்ஸ் ஹாலில் திருமணம் நடக்கிறது.

இதில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார். திமுக இளைஞரணி செயலாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, வடக்கு மாவட்ட செயலாளரும் குறு,சிறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் அமைச்சர் எ.வ.வேலு, எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி, அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, துணை பொது செயலாளர்கள் அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் பொன்முடி, ஆ.ராசா எம்பி, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி எம்பி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், க.குமணன், படுநெல்லி பி.எம்.பாபு, ஒன்றிய பொருளாளர் ஆ.தசரதன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் சி.கே.வி.தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் யுவராஜ், ஒன்றிய கவுன்சிலர் ராம்பிரசாத், மாணவரணி துணை செயலாளரும் வாலாஜாபாத் பேரூராட்சி துணை தலைவருமான ஏ.வி.சுரேஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் ராஜலட்சுமி குஜராஜ், காஞ்சிபுரம் திமுக பிரமுகர்கள் சாட்சி சண்முகசுந்தரம், ஜேகே என்கிற ஜெயக்குமார், மாநகராட்சி கவுன்சிலர் வ.கமலக்கண்ணன், வாலாஜாபாத் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பி.லோகுதாஸ், ஒன்றிய தொண்டரணி துணை அமைப்பாளர் எஸ்.கே.சுரேஷ், வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள்  பாஸ்கர், கோவேந்தன், அருள்முருகன், ஐயப்பன், பார்த்தசாரதி மற்றும் கிராம தொழிலாளர் சம்மேளன மாவட்ட தலைவர் அவளூர் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு மாமல்லபுரம் பூஞ்சேரி கூட்ரோடு பகுதியில்  முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

Related Stories: