டிவிட்டர் பாலோயர்கள் குறைவது ஏன்?; மஸ்க் விளக்கம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: டிவிட்டர் பலோயர்களின் எண்ணிக்கை குறைவது ஏன்? என்று எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார். டிவிட்டரை எலான் மஸ்க் வாங்கிய பிறகு, ஆட்குறைப்பு, நிர்வாக சீர்த்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூக்கர்பெர்க்கை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இதேபோல், பலர் தங்களது பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக குற்றம்சாட்டி இருந்தனர்.

இந்நிலையில், எலான் மஸ்க் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘டிவிட்டர் இப்போது நிறைய போலி, மோசடி கணக்குகளை நீக்குகிறது. எனவே உங்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைவதை நீங்கள் காணலாம்’ என்று தெரிவித்து உள்ளார். இதேபோல், டிவிட்டரின் எழுத்து வரம்பை 280ல் இருந்து 1000 ஆக உயர்த்தவும் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.

Related Stories: