நாடாளுமன்ற தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தமிழக ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: பாலகிருஷ்ணன் பேட்டி

ராசிபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டல பயிற்சி முகாம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் கூறுகையில், பெரு முதலாளிகளுக்கும், அம்பானி மற்றும் அதானிக்கும் கோடிக்கணக்கான கடனை தள்ளுபடி செய்கிறார்கள். கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்தி உள்ளது. பாஜவினர் கவர்னரை பார்த்து, தமிழக அரசு மீது புகார் தெரிவித்து மனு கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு பிரதமர் வந்தபோது, பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக தெரிவித்து, தமிழக அரசு மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புகின்றனர்.

ஆன்லைன் சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் விட்டதால், காலாவதியாகி விட்டது. தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது கேள்விக்குறியாகி உள்ளது. கவர்னருக்குண்டான வேலையை விட்டு விட்டு, அவர் மற்ற அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். எனவே, கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜ அல்லது ஆர்எஸ்எஸ் பணி செய்ய சென்று விடலாம். வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: