சென்னை: நவம்பர் 21-ம் தேதி முதல் நவ.27-ம் தேதி வரை விற்பனைக்கு கடத்த முயன்ற ரூ.11.73 லட்சம் மதிப்புள்ள ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 1809 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 87 லிட்டர் மண்ணெண்ணெய், 72 எரிவாயு உருளை, 3520 கிலோ துவரம் பருப்பு, கடத்தலுக்கு பயன்படுத்திய 47 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
