தரமணி மயான பூமியில் பராமரிப்பு பணி 20 நாட்களுக்கு வேளச்சேரி மயானபூமியை பயன்படுத்த வேண்டுகோள்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: தரமணி மயான பூமியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், 20 நாட்களுக்கு வேளச்சேரி மயானபூமியை பயன்படுத்த சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.  சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம் தரமணி 100 அடி சாலை, பாரதி நகரில் உள்ள மயான பூமியில் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் இன்று முதல் வரும் 20ம்தேதி வரை 20 நாட்களுக்கு இந்த மயான பூமி இயங்காது. எனவே, பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் 1ம்தேதி முதல் 20ம்தேதி வரை பொதுமக்கள் பகுதி-40, வார்டு-172க்குட்பட்ட வேளச்சேரி பிரதான சாலை, குருநானக் கல்லூரி அருகில் உள்ள இந்து மயானபூமியைப் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: