அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: சென்னை, அசோக்நகர், அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் திருமா பயிலகத்தின் மூலம் அரசு வேலைவாய்ப்புக்கான பயிற்சி வகுப்புகளைக் கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இப்பயிலகத்தில் சனிக்கிழமை(டிச.3) காலை 9 மணிக்கு தேர்விற்கான வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. மேலும், பயிற்சி வகுப்புகள் தேர்வு மற்றும் கலந்துரையாடல் முறையில் நடைபெற இருக்கிறது. தொலைதூர போட்டியாளர்களுக்கு இணையவழி பயிற்சி வகுப்புகளும் நடைபெறும். இப்பயிற்சி வகுப்பு மற்றும் தேர்வுத்தொடரில் கலந்துகொள்ள விரும்புவோர், அலைபேசி எண்கள் 8610392275, 9042991182 மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: