போக்குவரத்து கழகத்தின் 6 கோட்டங்களுக்கு 1,000 புதிய பஸ்கள் கொள்முதல் செய்ய ரூ.420 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் புதிதாக 1000 பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.420 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இவை தமிழத்தில் உள்ள ேபாக்குவரத்து கழகத்தின் 6 கோட்டங்களுக்கு வழங்கப்படும்.

தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவங்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழக சட்டப்பேரவையில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யவும் மற்றும் 1000 பழைய பேருந்துகளை புதுப்பித்திடவும் 110-ன் கீழ் முதல்வர் அறிவிப்பினை வெளியிட்டார். இதனிடையே, புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு மீண்டும் பேருந்து சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்பு நாளொன்றுக்கு 1 கோடியே 70 லட்சம் பயணிகளாக இந்தாண்டு உயர்ந்துள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் இலவசமாக உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ரூ.130 கோடி மதிப்பீட்டில் அடிச்சட்டம் நல்ல நிலையிலுள்ள 1000 பழைய பேருந்துகளை புதுப்பித்திட அரசின் நிதியாக ரூ.80 கோடியும் மீதமுள்ள ரூ.50 கோடியினை அந்தந்த போக்குவரத்துக் கழகங்களே ஏற்க வேண்டும். அதேபோல், ரூ.420 கோடி மதிப்பீட்டில் 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இந்த முயற்சிகளின் மூலம் அரசு போக்குவரத்து கழகங்களின் மூலமாக வழங்கப்படும் பொதுப் பேருந்து சேவைகள் நாட்டில் முதன்மையான நிலைக்கு உயர்ந்திடும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: