தமிழகத்தில் பாரம்பரிய காளைகளை பாதுகாப்பதற்கு நாங்கள் எதிராக இல்லை: உச்சநீதிமன்றத்தில் பீட்டா தரப்பில் வாதம்

டெல்லி: தமிழகத்தில் பாரம்பரிய காளைகளை பாதுகாப்பதற்கு நாங்கள் எதிராக இல்லை என்ற வாதத்தை உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு முன்வைத்துள்ளது. பாரம்பரிய காளைகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டு பயன்படுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது எனவும் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டத்தை தமிழகம் இயற்றியிருப்பது உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது எனவும் பீட்டா தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு கலாசார வேரை கொண்டிருக்கவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: