3-வது ஒருநாள் போட்டியில் நியூசி. - இந்தியா மோதல்

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து - இந்தியா மோதும்  3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கி நடக்கிறது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதலில் விளையாடிய டி20 தொடரில், ஹர்திக் பாண்டியா தலைமையில் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து தவான் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் நியூசி. 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்து 2வது ஆட்டம் மழை காரணமாக முடிவின்றி கைவிடப்பட்டது. நியூசி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 3வது போட்டி  இன்று நடைபெற உள்ளது. இதில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற நெருக்கடியுடன் இந்தியா களமிறங்குகிறது.

அதே சமயம், 2019ல் இருந்து சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் போட்டிகளில் ஒன்றில் கூட தோற்றதில்லை என்ற உற்சாகம் தரும் புள்ளிவிவரத்துடன் நியூசிலாந்து தொடரை வெல்ல வரிந்துகட்டுகிறது. இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் உள்ளதால் ஆட்டத்தில் பரபரப்பு, விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. மழை அச்சுறுத்தல்: ஆட்டம் நடைபெற உள்ள கிறைஸ்ட்சர்ச் நகரில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கைகள் சொல்கின்றன. 60 சதவீதம் மழைக்கு வாய்ப்பு, 62 சதவீத ஈரப்பதத்துடன், மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில்  காற்று வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories: