மாணவிகளுக்கு நள்ளிரவில் ஆபாச ‘மெசேஜ்’ அனுப்பிய பேராசிரியர்: மாணவர்கள் தர்ம அடி

ஆத்தூர்: ஆத்தூர் அரசு கலை அறிவியில் கல்லூரி பேராசிரியர், நள்ளிரவு நேரத்தில் மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனையறிந்த மாணவர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். சேலம்  மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த கல்லூரியில் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு பணியாற்றி வருகிறார்கள்.

கல்லூரியில் கணித பாடப்பிரிவில் பயிலும் மாணவிகளுக்கு, பாடம் நடத்தும் கவுரவ பேராசிரியர் ஒருவர், ஆசை வார்த்தைகள் மற்றும் பாடத்திற்கு சம்பந்தமில்லாத தகவல்களை நள்ளிரவில் அனுப்பி, சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.  நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவிகள் சிலர், சக மாணவர்களிடம், பேராசிரியர் தங்களது வாட்ஸ்அப்பிற்கு அனுப்பிய தகவல்களை காட்டி அழுதுள்ளனர். ஆத்திரமடைந்த மாணவர்கள், பேராசிரியரிடம் சென்று கேட்டுள்ளனர். அப்போது அவர் முறையான பதில் சொல்லாததால், மாணவர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன், ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. இதில் பேராசிரியரை மாணவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். மாணவிகள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகத்தினர் தெரித்துள்ளனர்.

Related Stories: