போதை பொருள், மது ஒழிப்பு சார்ந்த விழிப்புணர்வு அனைத்து அரசு பள்ளிகளிலும் போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்

சென்னை: போதை பொருள், மது ஒழிப்பு சார்ந்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார். போதைப் பொருள் மற்றும் மது ஒழிப்பு சார்ந்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் நடுநிலை, உயர், மேல்நிலை பள்ளிகளின் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் வருவாய் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற 29 மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.1000, இரண்டாம் பரிசு ரூ.750 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.500 என ரொக்கப் பரிசுகளும், சான்றிதழ்களும் மாவட்ட ஆட்சியர் அமிர்த ேஜாதி நேற்று வழங்கினார்.

மேலும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் போதைப் பொருள் தடுப்புக் குழு அமைக்கப்பட்டு அவற்றின் செயல்பாடுகளுக்கு ரூ.1000 காசோலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு கலெக்டர் வழங்கினார். கலெக்டர் அமிர்த ஜோதி பேசுகையில், மாணவர்களின் மனநலம், உடல் நலம் பாதுகாக்கப்பட வேண்டும். சமூக வலைத்தளங்களின் தாக்கத்தால் இன்றைய மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை போக்கும் வகையிலும் இக்குழு உறுப்பினர்கள் செயல்பட வேண்டும்” என்றார். இந்நிகழ்ச்சியை சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ் ஒருங்கிணைத்தார்.

Related Stories: