தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்னதானம், நலத்திட்டஉதவி

தாம்பரம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதி திமுக சார்பில் பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை தாய்மார்களுக்கு பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி ஏற்பாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மண்டல குழு தலைவர்கள் இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

புனித தோமையார்மலை வடக்கு ஒன்றியம், மதுரப்பாகம் ஊராட்சியில் இளைஞர் அணி துணை அமைப்பாளரும், மதுரபாக்கம் ஊராட்சி மன்ற தலைவருமான வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் அமுதா வேல்முருகன் ஏற்பாட்டில் 45 கிலோ கேக் வெட்டி, ஆயிரம் பேருக்கு அரிசி மற்றும் சேலைகளை தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா வழங்கினார். தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ் ஏற்பாட்டில் தாம்பரம் குட் லைப் சென்டர் என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில், ஜா.ரவிக்குமார், விக்கி (எ) யுவராஜ், ஹரீஷ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். தாம்பரம் மாநகராட்சி 5வது மண்டல குழு தலைவர் எஸ்.இந்திரன் ஏற்பாட்டில் சேலையூர் - அகரம்தென் பிரதான சாலையில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது.

செம்பாக்கம் தெற்கு பகுதி திமுக சார்பில் பகுதி செயலாளர் இரா.சுரேஷ் ஏற்பாட்டில் சிட்லபாக்கம், ஜட்ஜ் காலனி பகுதியில் உள்ள அரசு மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் புனித தோமையார் மலை வடக்கு ஒன்றிய முன்னாள் செயலாளர் திருநீர்மலை ஜெயக்குமார் மதிய உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் விஜயரங்கன், தேவேந்திரன், கற்பகம் சுரேஷ், ராமச்சந்திரன், லட்சுமிபதிராஜா, கல்யாணிமணிவேல், முருகன், அன்பழகன், ராஜா, தனவந்தன், மணிவேல், சதீஷ்குமார், இளைஞர் அணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுபோன்று தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் செய்து உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடினர்.

Related Stories: