டெல்லி மாநகராட்சிக்கு டிச.4ல் தேர்தல்!: பாஜக, ஆம் ஆத்மி, காங். இடையே மும்முனை போட்டி.. கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம்..!!

டெல்லி: டெல்லியில் மாநகராட்சிகள் தேர்தல் டிசம்பர் 4ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். மாநில சட்டமன்ற தேர்தலுக்கு சற்று சளைக்காத அளவில் டெல்லி மாநகராட்சி தேர்தலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 14ம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததை அடுத்து டெல்லி முழுவதும் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. குஜராத் சட்டமன்ற தேர்தலைப்போல் டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

வார்டுகள் அனைத்தையும், பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தல் வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் முடிவுர இன்னும் 4 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையை முடுக்கிவிட்டுள்ளன. டெல்லி மாநகராட்சி வார்டுகளில் டிசம்பர் 4ம் தேதி பதிவாகும் வாக்குகள் அனைத்தும் 7ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Related Stories: