பிரேசில் நாட்டில் எஸ்பிரிட்டோ சாண்டோ பள்ளியில் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு: 11 பேர் காயம்

பிரேசில்: பிரேசில் நாட்டில் எஸ்பிரிட்டோ சாண்டோ மாகாணத்தில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பள்ளிகளில் 16 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயம் அடைந்தனர்.

தாக்குதல்கள் மாநிலத் தலைநகர் விட்டோரியாவிலிருந்து வடக்கே 80 கிமீ தொலைவில் அமைந்துள்ள அராக்ரூஸ் என்ற சிறிய நகரத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இராணுவ உடையில் இருந்த அடையாளம் தெரியாத இளைஞன் ஒருவர்  இரண்டு பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் சிசிடிவி காட்சிகளில் ஆயுதம் ஏந்தியபடி இராணுவ உடை மற்றும் முகத்தை மூடியவாறு சுற்றியது தெரியவந்ததுள்ளது. அந்த நபரை போலிசாரால் கைது செய்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திட நபர் குறித்த விவரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. பிரேசில் அமைச்சர் விக்டர் கோடோயும் தனது அனுதாபங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்த டிவிட்டர் பதிவில்;

பிரிமோ பிட்டி மாநில தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மற்றும் அராக்ரூஸில் உள்ள ப்ரியா டி கோக்வேரல் கல்வி மையத்தின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எனது இரங்கல்கள். இந்த வன்முறை வெளிப்பாட்டிற்கு எனது மறுப்பை பதிவுக்காக சமர்ப்பிக்கிறேன்,” என்று கோடோய் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: