இரட்டை ரயில் பாதை பணி முடிந்ததும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வேகம் அதிகரிக்கப்படும்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்

கன்னியாகுமரி: இரட்டை ரயில் பாதை பணி முடிந்ததும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்  ரயிலின் வேகம் அதிகரிக்கப்படும் என்று  தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறினார். தெற்கு ரயில்வே பொது மேலாளராக சமீபத்தில் ஆர்.என்.சிங், பொறுப்பேற்றார். தற்போது அவர் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு கட்டமாக திருவனந்தபுரம் கோட்டத்தில் ஆய்வு பணிக்காக அவர் நேற்று,   கன்னியாகுமரி வந்தார். பின்னர் காலை 9.30 மணியளவில் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து அவர் ஆய்வை தொடங்கினார்.  பின்னர் அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் கேரளாவுக்கு புறப்பட்டார்.

முன்னதாக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், கன்னியாகுமரியில் நிருபர்களிடம் கூறுகையில்:

விமான நிலையத்துக்கு இணையாக கன்னியாகுமரி ரயில் நிலையம் மேம்பாடு  அடைய உள்ளது. கன்னியாகுமரிக்கு  கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. தற்போது இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்ததும், ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என்றார்.

Related Stories: