ராகுலுடன் பிரியங்கா குடும்பத்துடன் நடை பயணம்

கேர்தா: மத்தியப் பிரதேசத்தில் ராகுலின் நடை பயணத்தில் 2வது நாளாக நேற்று, பிரியங்கா காந்தி தனது குடும்பத்துடன் பங்கேற்றார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடை பயணம், தற்போது  மத்தியப் பிரதேசத்தில் நடந்து வருகிறது. மூன்றாவது நாளான நேற்று, கார்கோன் மாவட்டத்தில் உள்ள கேர்தாவில் இருந்து நடை பயணம் தொடங்கியது.

உத்தரப் பிரதேசத்துக்கான காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவருடைய கணவர் ராபர்ட் வதேரா, அவர்களின் மகன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு, ராகுலுடன் நடந்தனர். இந்த யாத்திரை 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான ஓம்கரேஷ்வரில் நேற்று மாலை முடிந்தது. இதனை தொடர்ந்து, கோயிலில் ராகுல் சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்தார். பின்னர், நர்மதா நதிக்கரையில் நடந்த ஆரத்தி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

Related Stories: