அண்ணா அறிவாலயத்தில் டிச.1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், வரும் 1ம்தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

 திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 1ம்தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். அதுபோது, மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். கூட்டத்தில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: