மதுரை: குற்றாலம் பகுதிகளில் செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கி செயல்படும் தனியார் விடுதிகளை மூட ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் உயார்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். மனுவில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் ஏராளமான தனியார் விடுதிகள் செயற்கை நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது. அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.