நெய்வேலியில் என்.எல்.சி-க்கு நிலம் வழங்கினால் பணப்பலன், நிரந்தர வேலை வழங்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை

கடலூர்: நெய்வேலியில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கொடுப்பவர்களுக்கு பணபலம், வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாற்றமாட்டோம் என தெரிவித்துள்ளனர். சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் வாங்குவோருக்கு வேலைவாய்ப்பு, அதற்கான பயிற்சி அளிப்பது மற்றும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், வேலையில் சேர விரும்பத்தவர்களுக்கு மாதாந்திர உதவி தொகையாக ரூ.7,000 முதல் ரூ.10,000 வரையும், மேலும் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வழங்கப்படும் என பணப்பலன் திட்டங்களை அறிவித்துள்ள மாவட்ட நிர்வாகம் அதற்கான விண்ணப்ப படிவத்தை பெற்று கொள்ளுமாறு அறிவித்துள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கத்தாழை, ஆதனூர், வலையம்மா தேவி கிராமங்களை சேர்ந்த மக்கள் என்.எல்.சி. சுரங்கத்திற்கு 2006-ல் நிலம் எடுத்த போது வேலைவாய்ப்பு மற்றும் ஏக்கருக்கு ரூ.6 லட்சம் தருவதாக கூறிவிட்டு இதுவரை நிறைவேற்றவில்லை என புகார் தெரிவித்தனர்.

எனவே இப்போது அறிவித்துள்ள பணபலன் போதுமானது அல்ல என தெரிவித்துள்ள கிராம மக்கள் ஏக்கருக்கு ரூ.50 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை ஏற்கா விட்டால் தங்களிடம் எடுக்கப்படும் நிலத்திற்கு பதிலாக வேறு ஒரு இடத்தில் அதே அளவு நிலத்தை வாங்கித்தர அரசு முன்வர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.     

Related Stories: