சபரிமலைக்கு இருமுடியுடன் இனி ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் பறக்கலாம்

சென்னை: சபரிமலைக்கு ஜயப்ப பக்தர்கள் செல்ல 5 விமானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருமுடிக்கு அனுமதி கொடுத்ததால் பக்தர்கள் மகழ்ச்சி அடைந்துள்ளனர். கேரள மாநிலம் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பலர், விமானங்களில் பயணம் செய்வதால், சென்னையில் இருந்து கொச்சி செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தினமும் சென்னை-கொச்சி இடையே இயக்கப்பட்டு வந்த மூன்று விமானங்கள், தற்போது ஐந்து விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னை- கொச்சி-சென்னை இடையே தற்போது நாள் ஒன்றுக்கு, பத்து விமான சேவைகள் இயங்குகின்றன. இந்த அனைத்து விமானங்களிலும்  ஐயப்ப பக்தர்கள் செல்கின்றனர்.

ஆனால் விமானங்களில் தேங்காய் எடுத்துச் செல்லக்கூடாது என்று விமானபாதுகாப்பு விதி உள்ளது.  ஐயப்ப பக்தர்கள் தலையில் சுமந்து செல்லும் இருமுடிக்குள், இரண்டு தேங்காய்கள் இருக்கும். ஒரு தேங்காய் துவாரம் போட்டு பசு நெய்யை அடைத்து வைத்திருப்பார்கள். இந்த தேங்காய்கள்  கொண்டு செல்ல தடை இருந்ததால், ஐயப்ப பக்தர்கள் பலர் விமானங்களில், செல்ல தயங்கினர். அதோடு இருமுடி கட்டி சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு விமானங்களில்  தேங்காய் எடுத்து செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை, ஒன்றிய அரசின் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஃபீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி எனப்படும், பி சி ஏ எஸ் பிறப்பித்த உத்தரவில், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இருமுடி  கட்டுக்குள், தேங்காய் வைத்து எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முறையான பாதுகாப்பு சோதனைகள் உட்பட்டு, இந்த தேங்காய்களை எடுத்துச் செல்லலாம். அடுத்த ஆண்டு, 2023 ஜனவரி 20ம் தேதி வரைஅனுமதிக்கப்படும்.

Related Stories: