குளிர்பிரதேசம் போல் சில்லென்று மாறிய சென்னை: திடீர் வானிலை மாற்றத்தை அனுபவித்த மக்கள்

சென்னை: சில்லென்று மென்குளிர் காற்றும் லேசான மழைச்சாரலும் தலைக்கு மேல் குடைப்பிடித்த வெண்மேகம் கூட்டமும் சென்னை வாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரு தினங்களாக சில்லென்று மென்குளிர் காற்றும் மற்றும் லேசான மழைத்தூரலுடன் ரம்மியமான சூழல் நிலவுகிறது. உதகை, கொடைக்கானலை போன்ற இதமான வானிலை நிலவுவதால் சென்னை வாசிகள் பலரும் மெய்சிலிர்த்து போய் உள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரையில் வாக்கிங் சென்ற பலரும் வானிலை இதமாக இருப்பதாக தெரிவித்தனர். நடப்பு மாதத்தில் நேற்று 11-வது முறையாக தட்பவெப்பம் 25 கிடிரி செல்சியஸ்க்கும் கீழாக வெப்பநிலை பதிவாகி கோவை, பெங்களூருவை விட சில்லென்று இதமான சூழல் நிலவியது.

இதனிடையே புயலோ புயல் சின்னமோ உருவாகும் போது வடதிசையில் உள்ள குளிர்ந்த காற்று கடலோர மாவட்டங்களின் வீசுவது வழக்கம் என வானிலை ஆர்வலர் பிரதிப் ஜான் தெரிவித்துள்ளார். இது பனியினால் விசிய குளிர்ந்த காற்று இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

சென்னையில் மழை குறைந்தாலும் மார்கழி மாதத்தை போல் குளிர் வாட்டுவதால் அதிகாலையில் அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் அவதிகுள்ளாகினர். வாகன ஓட்டிகள் பலரும் எதிர்வருக் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாததால் புகை மூட்டம்போல் காட்சி அளித்த சாலையில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு சென்றனர்.

Related Stories: