கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 600 டிஎம்சி தண்ணீர் திறப்பு

பெங்களூரு: கர்நாடகா-தமிழகம் இடையிலான காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்னையில் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் அடிப்படையில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்.

கடந்த ஒரு மாத காலத்தில் 193 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் இவ்வாண்டு ஜூன் தொடங்கி நவம்பர் வரை 600 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 60 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக 6 மாதங்களில் 600 டிஎம்சி தண்ணீர் திறந்துள்ளதாக கர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: