பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கான மதிப்பீட்டு தொகையை உயர்த்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் மாநில அளவிலான 2வது ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பின்னர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது பலர் உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளது. இதை தடுக்க வேண்டும். இதற்காக, சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ள கருவியை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும். இதன் விலை ரூ.20 லட்சம் ஆகிறது. இதை வாங்கி நகராட்சி, பேரூராட்சி நிர்வாகத்துக்கு தமிழக அரசு வழங்க வேண்டும்.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு வழங்கும் நிதி மதிப்பீடு குறைவாக இருக்கிறது. தற்போது விலைவாசிக்கு ஏற்ப மதிப்பீடு உயர்த்த வேண்டும். மாடிப்படி கட்டும் திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும். இதற்கான செலவை மாநில அரசு ஏற்க வேண்டும் என்றார்.

Related Stories: