அமெரிக்கரை கொன்ற வழக்கில் தண்டனை; சினிமா பாணியில் தப்பிய 2 தீவிரவாதிகள்: வங்கதேச கோர்ட் வளாகத்தில் பரபரப்பு

டாக்கா: அமெரிக்கரை கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற 2 தீவிரவாதிகள் டாக்கா நீதிமன்ற வளாகத்தில் இருந்து சினிமா பாணியில் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேச தலைநகர் டாக்கா நீதிமன்றத்தில் வங்கதேசத்தில் பிறந்த அமெரிக்க குடிமகனான பதிப்பாளர் ராய் உட்பட இரண்டு பேரை கொன்ற வழக்கில் கைதான இரண்டு தீவிரவாதிகள் மொய்னுல் ஹசன் ஷமிம் என்ற இம்ரான் மற்றும் அபு சித்திக் சோஹைல் ஆகியோர் தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருவருக்கும் கடந்தாண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே மற்றொரு வழக்கில் இருவரும் டாக்கா நீதிமன்றத்தில் ஆஜராக அழைத்து வரப்பட்டனர். இருவரின் கைகளிலும் கைவிலங்குகள் போடப்பட்டு இருந்தன. இதற்கிடையில் திடீரென இரு தீவிரவாதிகளின் கூட்டாளிகள் இருவர், நீதிமன்ற வளாகத்திற்கு பைக்கில் வந்தனர். அவர்கள் அங்கிருந்த போலீசார் மீது ரசாயன மருந்துகளை தெளித்தனர். அங்கிருந்த கூட்டத்தின் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தொடர்ந்து டாக்கா பெருநகர நீதிபதி நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் உள்ள குறுகிய சாலையில், இரண்டு தீவிரவாதிகளையும் இரண்டு பைக்கில் அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, வங்கதேச உள்துறை அமைச்சர் அசதுஸ்ஸாமான் கான் கமால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘2 தீவிரவாதிகளை திரைப்பட பாணியில் கடத்திச் சென்றனர். அவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: