ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு?

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக இருந்த பேரறிவாளன், 142வது சட்டப்பிரிவின் கீழ் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இதைத் தொடர்ந்து, முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரும், இதே சட்டப்பிரிவை பயன்படுத்தி தங்களையும் சிறையில் இருந்து விடுதலை செய்யும்படி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதை கடந்த 11ம் தேதி நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா அமர்வு விசாரித்து, 6 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இவர்கள் 6 பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இதனிடையே இவர்களை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திடீரென சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் காங்கிரசும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது. தங்களது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என தெரிவித்து மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. எனவே இந்த மறு ஆய்வு மனு விரைவில் விசாரணைக்கு வரும் போது காங்கிரஸ் தரப்பிலும் வாதம் என்பது முன்வைக்கப்படும். என்று கூறப்படுகிறது.

Related Stories: