நயினார்குளத்தில் அமலை செடிகள் ஆக்கிரமிப்பு-அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நெல்லை : நெல்லை டவுன் நயினார்குளத்தில் அமலைசெடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனை அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை டவுன் நயினார்குளம் மூலம் அப்பகுதியில் உள்ள ஏராளமான விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. மேலும் தச்சநல்லூர், ராமையன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறிய குளங்களும் நிறைந்து அப்பகுதியில் உள்ள விளை நிலங்களை செழிப்படைய செய்கிறது.

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நயினார்குளத்தில் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. அதேநேரத்தில் குளத்தில் ஆங்காங்கே அமலை செடிகள் வளர்த்து தண்ணீரை மாசுபடுத்துகின்றன. இதனால் போதிய தண்ணீர் வருவது பாதிக்கிறது. இதன் காரணமாக பல விவசாயி நிலங்களுக்கு நீர்வரத்து இன்றி பாசனம் தடைபடுகிறது. கடந்த ஆண்டு நயினார்குளத்தில் அமலை செடிகள் அகற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவை ஆக்கிரமித்துள்ளன. எனவே, அமலை செடிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென நயினார்குளம் பகுதி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: