கோத்தகிரியில் நீர்பனியால் கடும் குளிர் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கோத்தகிரி :  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி உள்ளிட்ட நகர்புறபகுதி, நீர்நிலைகள், தேயிலை தோட்டங்கள்,விவசாய நிலங்களில் நீர்பனி கொட்டுகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் நவம்பர் 15ம் தேதிக்கு பின் பனிக்காலம் துவங்கும்.கடந்த இரண்டு ஆண்டுகளாக பனிக்காலம் முறையான காலக்கட்டத்தில் துவங்காத நிலையில் அப்போதைய கால நிலைக்கு ஏற்றவாறு பருவமழையை தொடர்ந்து பனிக்காலம் துவங்கியது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கோத்தகிரி நகர்புற பகுதிகளிலும்,நீர்நிலைகள்,விவசாய நிலங்கள், கிராமப்புற பகுதிகளில் நீர்பனி பெய்யத் தொடங்கியுள்ளது.

இதனால் மாவட்டத்தில் இரவு பெய்யும் பனிப்பொழிவு காரணமாக காலை எட்டு மணி வரை குளிர் நீடித்து வருகிறது. கடும் குளிரில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள போர்வை, ஸ்வட்டர்,தொப்பி போன்றவற்றை அணிந்து பணிகள்,பள்ளிகள் போன்ற அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள செல்கின்றனர்.காலநிலைக்கு ஏற்றவாறு பனிக்காலம் துவங்கிய நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் பனிப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: