மெட்ராஸ் ஐ நோய்க்கு இதுவரை 1.50 லட்சம் பேருக்கு சிகிச்சை: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: மெட்ராஸ் ஐ நோய்க்கு இதுவரை 1.5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் இதுவரை கண்பாதிப்பு ஏற்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். மெட்ராஸை ஐ நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கையையும் எடுத்து வருகிறது. மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை போட்டுக்கொள்ள கூடாது. டிசம்பர் 2-வது வாரத்துக்கு பிறகு மெட்ராஸ் ஐ நோய் பாதிப்பு படிப்படியாக குறையும்.

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெட்ராஸ்-ஐ நோய் பரவி வருகிறது. கண் விழி மற்றும் இமையை இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் ஒரு வைரஸ் தொற்றால் ‘மெட்ராஸ் ஐ’ ஏற்படுகிறது. இந்த நோய் பாதிப்புள்ளவர்களுக்கு கண்களில் எரிச்சல், கண் வீக்கம், கண் உறுத்தல், விழிப்பகுதி சிவத்தல், கண்ணில் வடிதல், இமைகள் ஒட்டிக்கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம். கண் விழி மற்றும் இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் ஒரு வித வைரஸ் தொற்றால் ‘மெட்ராஸ் ஐ ஏற்படுகிறது.

இந்த நோய் வந்தவர்களுக்கு கண் எரிச்சல், வீக்கம், கண் உறுத்தல், விழிப்பகுதி சிவத்தல், கண்ணில் நீர் வடிதல், இமைப்பகுதிகள் ஒட்டிக்கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த மெட்ராஸ்-ஐ கண் நோய்த் தொற்றானது எளிதில் ஒருவரிடம் இருந்து அடுத்தவர்களுக்கு பரவக்கூடியது. தற்போது வைரஸ் தொற்றால் மெட்ராஸ் ஐ பரவி வருகிறது. இது மழைக்காலம் முடிவடைந்து பனிப்பொழிவு ஏற்படும் காலத்தில் பரவும் நோய் ஆகும். நெல்லை மாவட்டத்தில் தற்போது இந்த வகை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதைக்கண்டு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். கண் நோய் ஏற்பட்டவர்களுக்கு 3 அல்லது 4 நாட்களுக்குள் தானாகவே சரியாகி விடும்.

அவர்கள் வீட்டில் ஓய்வு எடுத்தால் மற்றவர்களுக்கு பரவுதல் தடுக்கப்படும். குளிர்ந்த நீரில் கண்களை கழுவ வேண்டும். கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். மெட்ராஸ் ஐதங்களுக்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக அனைவரும் அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். மெட்ராஸ் ஐக்கு சிகிச்சை பெற டாக்டரை மட்டுமே அணுக வேண்டும். நேரடியாக மருந்து கடைகளில் மருந்து வாங்கி தாங்களே சுய சிகிச்சை செய்து கொள்ள வேண்டாம்.

கண் மற்றும் கைகளை சுத்தமாக கழுவி வைத்திருக்க வேண்டும். கண் நோய் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை, மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மெட்ராஸ் ஐ’ நோய் பாதிப்பு உள்ளவர்கள் அடுத்தவர் கண்களைப் பார்ப்பதால் நோய் பரவும் என்பது முற்றிலும் தவறான கருத்து என்பது குறிப்பிடத்தக்கது. யாருக்கும் இதுவரை கண்பாதிப்பு ஏற்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.

Related Stories: