மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நாகர்கோவிலில் இளைஞரிடம் போலீசார் விசாரணை

நாகர்கோவில்: மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் சேர்ந்த இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகர்கோவிலில் அசாமைச் சேர்ந்த அஜீம் ரகுமான் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மங்களூருவில் நேற்று முன்தினம் ஆட்டோவில் குக்கர் குண்டுவெடிப்பில் முகமது ஷரீக் என்பவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து கர்நாடக சிறப்பு தனிப்படை போலீசார் அளித்த தகவலின் படி தமிழ்நாடு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அஜீம் ரகுமான் தொலைபேசியிலிருந்து குண்டு வெடிப்பில் காயமடைந்த ஒருவரின் எண்ணுக்கு அழைப்பு சென்றிருப்பதால் விசாரணை நடந்து வருகின்றது. நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் அஜீம் ரகுமானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடி விபத்தில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். காயமடைந்த ஒருவரின் தொலைபேசியிலிருந்து அசாமை சேர்ந்த ஒரு தொலைப்பேசி எண்ணுக்கு சென்றுள்ளதை அங்குள்ள போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த வாலிபரின் எண் குறித்து நாகர்கோவில் போலீசாருக்கு மங்களூரு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் நாகர்கோவில் கோட்டார் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்திய போது அசாமைச் சேர்ந்த அஜீம் ரகுமான் என்பவர் நாகர்கோவிலில் பாஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். வெடி விபத்தில் சிகிச்சை பெற்றுவரும் ஷாரிக் கடந்த ஆண்டுகளில் 4 செல்போன்களை மாற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ஷாரிக் செல்போனில் பேசிய நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் ஷாரிக்கிடம் இன்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

குடும்பத்தாரிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கடந்த ஒன்றரை மாதமாக மைசூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். மைசூரில் வெடிகுண்டு தயாரித்து அரசுப் பேருந்தில் மங்களூரு கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு மருத்துவமனிக்கு வந்த ஷாரிக்கின் பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் நடைபெற்ற தேவாலயத்தில் ஏற்பட்ட குண்டிவெடிப்பிற்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும்  தற்போது கூற்ப்படுகிறது.

Related Stories: