எழும்பூர் காவல் நிலையம் முன் நடந்த படுகொலைக்கு காவல்துறை பொறுப்பேற்க வேண்டும்: எடப்பாடி அறிக்கை

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஓரிரு நாட்களில் மட்டும் எழும்பூர் காவல் நிலையம் எதிரே ஒரு கொலை, மாடம்பாக்கம் ஊராட்சி தலைவர் படுகொலை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதுபற்றி நான் சட்டமன்றத்தில் பேசும்போதும், அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டி அளிக்கும் போதெல்லாம் எடுத்து கூறி வருகிறேன். இதில் ஒன்றுதான் தீபாவளிக்கு முன் கோவையில் நடந்த கார் - சிலிண்டர் குண்டு வெடிப்பு நிகழ்வு. நேற்று முன்தினம் சென்னை எழும்பூர் காவல் நிலையம் முன் நடந்த படுகொலைக்கு காவல்துறை பொறுப்பை ஏற்க வேண்டும். தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை தடையில்லாமல் நடைபெறுகிறது. கொலை, கொள்ளை, வழிபறி சம்பவங்கள் நடைபெறுகிறது என்று பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன. எனவே, நான் ஏற்கனவே பலமுறை சட்டமன்றத்திலும், எனது அறிக்கைகளின் வாயிலாகவும், பேட்டிகளின் மூலம் குறிப்பிட்டவாறு, தமிழத்தில் சட்டம் ஒழுங்கை பேணி காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: