தமிழக காங்கிரஸ் தலைவர் பேட்டி சாவர்க்கர் விவகாரத்தில் ராகுல்காந்தி மீது பொய் வழக்கு

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், மாநில துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன்,  டீக்காராம் பலர் கலந்து கொண்டனர். அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:  சாவர்க்கர் குறித்து, ராகுல் காந்தி தவறாக குறிப்பிட்டதாக கூறி அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து தான் சாவர்க்கர் சிறையில் இருந்து வெளியே வந்ததார். அதற்கான கடிதம் இருக்கிறது. மருத்துவமனைகள் எப்போதும் பிரச்னைக்குரியவைகள் தான். அங்கு கவனக்குறைவு இருப்பதும், மரணங்கள் ஏற்படுவதும் இயல்பு தான். ஏற்கனவே இருந்த அரசை விட தற்போது உள்ள அரசு, மருத்துவமனைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. முதல்வரும் மருத்துவமனைகளை ஆய்வு செய்து வருகிறார். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பெல்லாம் நுழைய முடியாத நிலையில் இருந்தது, தற்போது அந்த நிலை மேம்படுத்த பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: