அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் இந்தி திணிப்பு விழிப்புணர்வு; துண்டு பிரசுரம் விநியோகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய அரசின் இந்தி திணிப்பால் ஏற்படும் விளைவு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி வேடந்தாங்கல் கிராமத்தில் நேற்று நடந்தது. அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தம்பு  தலைமையில்  நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கிராமப்புறங்களில் வீதி வீதியாக சென்று, இந்தி திணிப்பால் ஏற்படும் விளைவு மற்றும் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க  குறித்து வியாபாரிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.  

இதையடுத்து, எல்.எண்டத்தூர், ஊனமலை ஆகிய ஊராட்சிகளில் பேருந்து நிறுத்தம், குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கிராம மக்களை சந்தித்து 5 ஆயிரம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். நிகழ்ச்சியில், வேடந்தாங்கல் ஊராட்சி தலைவர் வேதாச்சலம்,   அவைத்தலைவர் சிவபெருமான், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆதிநாராயணன், ஒன்றிய நிர்வாகிகள் தேவ், நிர்மலா தசரதன், ஜீவரத்தினம், பிரேம், ராஜகோபால், வெங்கடேசன், கலியுக கண்ணதாசன், பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: