திருவாரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சூரிய சக்தி மூலம் 1000 மெ.வா. மின் உற்பத்தி திட்டம் ஜனவரியில் தொடக்கம்..!!

திருவாரூர்: திருவாரூர், சேலம், கரூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூரிய சக்தி மூலம் 1000 மெ.வா. மின் உற்பத்தி திட்டம் ஜனவரியில் தொடங்கப்படவுள்ளது. முதல்முறையாக எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சூரிய சக்தி மின்சார மாவட்டங்களாக தமிழகத்தில் உருவாக உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 400 மெ. வா. சூரிய சக்தி மின்சார உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. சூரிய சக்தி மின்உற்பத்திக்காக தமிழ்நாடு மின்சார வாரியம், சொந்தமாக 3263 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளது. காற்றாலை மின்சார உற்பத்தியில் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது.

சூரிய சக்தி மூலம் மின்உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு தற்போது 4வது இடத்தில் உள்ளது. ஜனவரியில் 1,000 மெ. வா. மின்உற்பத்தி தொடங்கப்பட்டால் சூரிய சக்தி மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழும். சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துமாறு, அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. எனவே, பெரிய நிறுவனங்கள் அதிக திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைத்து, உற்பத்தியாகும் மின்சாரத்தை  விற்பனை செய்கின்றன.

வீடுகளில் குறைந்த திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, ஒன்றிய அரசு, 40 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. எனவே, பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, பலரும் குறைந்த திறனில் மேற்கூரை மின் நிலையங்களை அதிகளவில் அமைத்து வருகின்றன. சூரிய ஆற்றல் மிகவும் தூய்மையானது. அதன் மூலமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்தி எதிர்காலத்தை காக்க முஐடியும். சூரியசக்தி எப்போதும் கிடைக்கும் என்பதால், அதை பயன்படுத்தி மின்சாரத்தை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: