தமிழகத்தில் முதல் முறையாக சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது

சென்னை: சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம்  புத்துணர்ச்சி பெரும் வகையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் முறையாக கூட்டம் நடைபெறுகிறது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் தலைவராக போக்குவரத்து துறை அமைச்சர் தலைவராக இருந்த நிலையில். 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு முதலமைச்சர் தலைவராக்கப்பட்டார். இருப்பினும் பல்வேறு துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில் வாரியம் கூட்டவில்லை.

முதலமைச்சர் தலைமையில் இருப்பதால், துறைகளுக்கு இடையேயான பிரச்னைகளை எளிதில் தீர்க்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் புத்துணர்ச்சி பெரும் வகையில் இன்று நந்தனம் மெட்ரோ தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் முறையாக கூட்டம் நடைபெறுகிறது. மேலும் விரிவான இயக்க திட்டம், ஒருங்கிணைந்த ஒருங்கிணைப்பு, வணிகமயமாக்கல் ஆகியவற்றுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படும். விரிவாக்கப்பட்ட சென்னை பெருநகரப் பகுதியில் போக்குவரத்து ஒருங்கிணைக்கும் திட்டமிடப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் சிறப்பு அதிகாரி ஜெயகுமார் கூறுகையில்: அனைத்து துறைகளும் தனித்தனியாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை ஒருங்கிணைந்த திட்டமாக மாற்றக்கூடிய வகையில் கும்டா அமைந்துள்ளது. சென்னை விரிவாக்கத்திலும் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அடுத்த  25 வருடத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களை அனைத்து துறைகளையும்  ஒருங்கிணைந்து திட்டத்தை முன்வைக்கப்பட உள்ளது. மேலும் கிளாம்பாக்கம்  பேருந்து நிலையத்திலிருந்து ரயில் இணைக்கும் வகையில் திட்டம் அமைய உள்ளது.

தெற்கு ரயில்வே இதில் முதல் முறையாக இணைக்கப்பட உள்ளது. அனைத்து போக்குவரத்துத்தையும் ஒருங்கிணைக்கும் போது பொதுமக்கள் பயனடையும்  வகையிலான திட்டங்கள் முன்வைக்கப்பட உள்ளது. லண்டன் நாட்டில் பின்பற்றகூடிய ஒரு பயணச்சீட்டில் பல்வேறு பொதுப் போக்குவரத்தில் மக்கள் பயணிக்கூடிய வகையில் செயலி உருவாக்கப்படுகிறது. செல்போன் பயன்படுத்தி பயண திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைந்த பயண சீட்டு தளமாக செயல்படும். பிற போக்குவரத்தை இணைக்கும் வகையில் போக்குவரத்து முறைகள், நேரம் உள்ளிட்டவை அறியமுடியும். இந்த பரிவர்த்தனைக்கு  ஆலோசகர் நியமிக்கப்படும். பொது போக்குவரத்து முறைகளில் உள்ள பயணசீட்டு திட்டத்தை செயல்படுத்த உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: