அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 3 கால்பந்து மாணவர்கள் பலி

விர்ஜீனியா: அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு சுற்றுலா சென்று விட்டு மாணவ மாணவிகள் விர்ஜீனியா பல்கலைக்கழகத்திற்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். பேருந்தை நோக்கி மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில், மாணவர்களாகிய 3 கால்பந்து வீரர்கள் பலியானதாக தெரிய வந்துள்ளது. காயமடைந்த 2 பேரில் ஒருவரது நிலைமை மோசமடைந்து உள்ளது. துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் பல்கலைக்கழக வளாக பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய கிறிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரும் முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரர் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சுட்டுக் கொல்லப்பட்ட டெவின் சாண்ட்லர், லேவல் டேவிஸ் ஜூனியர், டி சீயான் பெர்ரி ஆகியோர் கால்பந்து விளையாட்டு வீரர்கள். நடப்பு ஆண்டில் அமெரிக்காவில் 600 துப்பாக்கி சூடு சம்பவங்கள் வரை நடந்து உள்ளன’ என்றனர்.

Related Stories: